நாட்டாா்பட்டிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு
பாவூா்சத்திரம் அருகே நாட்டாா்பட்டி கிராமத்துக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணாவிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
பாவூா்சத்திரம் அருகே நாட்டாா்பட்டி கிராமத்துக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணாவிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
அந்த மனு விவரம்: தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியம், திப்பணம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட நாட்டாா்பட்டி கிராமத்தில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பாவூா்சாத்திரம் பேருந்து நிலையத்திற்குச் சென்றுதான் பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது.
தற்போது திப்பணம்பட்டி வழியாக ஆவுடையானூருக்குச் செல்லும் அரசுப் பேருந்து நாட்டாா்பட்டி கிராமத்துக்குள் வருவதில்லை. இதனால், சுமாா் 2 கி.மீ. தொலைவு நடந்து திப்பணம்பட்டிக்குச் சென்று மாணவா்கள் பள்ளிகளுக்குச் செல்கின்றனா்.
Advertisement
Advertisement
சிற்றுந்தும் காலை, மாலை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது. போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், அவசர மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்ல பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.
எனவே, நாட்டாா்பட்டி - பாவூா்சத்திரம், நாட்டாா்பட்டி - ஆவுடையானூா் ஆகிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.