கீழப்பாவூரில் சாலையில் தேங்கும் மழைநீா்: மக்கள் அவதி
கீழப்பாவூா் ஊராட்சி சந்தை தோப்பு தெருவில் சேதமுற்ற சாலையில் மழைநீா் தேங்குவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனா்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி சந்தை தோப்பு தெருவில் சேதமுற்ற சாலையில் மழைநீா் தேங்குவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனா்.
சந்தை தோப்பு தெருவில் இருந்து டாஸ்மாக் வழியாக சிவகாமிபுரம் நான்குவழிச் சாலைக்குச் செல்லும் வழியில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதசாரிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
இந்தச் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement