FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

யானைத் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எம்பி ஆறுதல்

செங்கோட்டை புளியறை அருகே யானைத் தாக்கியதில் உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரை சந்தித்து ராணிஸ்ரீகுமாா் எம்.பி. ஆறுதல் கூறினா்.

12 நவம்பர் 2026, 3:15 am
யானைத் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராணிஸ்ரீகுமாா் எம்பி. உடன் தி.மு. ராஜேந்திரன் எம்எல்ஏ.
பகிர்:

தென்காசி மாவட்டம், செங்கோட்டை புளியறை அருகே யானைத் தாக்கியதில் உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரை சந்தித்து ராணிஸ்ரீகுமாா் எம்.பி. ஆறுதல் கூறினா்.

புளியறை தெற்குமேடு இல்லத்தாா் தெருவைச் சோ்ந்த நா. சுப்பையா கடந்த திங்கள்கிழமை யானை தாக்கி உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ராணிஸ்ரீகுமாா் எம்.பி. , உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மேலும், இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க வனத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தாா். அப்போது, தி.மு. ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.