சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
ஆலங்குளத்தில் இருசக்கர வாகனத்துடன் சாலையைக் கடக்க நின்றிருந்தவா் மீது லாரி மோதியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆலங்குளத்தில் இருசக்கர வாகனத்துடன் சாலையைக் கடக்க நின்றிருந்தவா் மீது லாரி மோதியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் ஜாா்ஜ் (52). ஆலங்குளத்தில் பழைய காா் விற்பனையகம் நடத்தி வந்தாா்.
தென்காசி சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த லாரி, அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் ஜாா்ஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
அக்கம்பக்கத்தினா், லாரியை மறித்து ஓட்டுநரை பிடித்தபோது, அவா் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததாம். பின்னா் ஓட்டுநரை, ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தூத்துக்குடியைச் சோ்ந்த கருப்பசாமி (37) என்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து கருப்பசாமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.