சங்கரன்கோவிலில் 2 ஆட்டோக்களுக்கு தீ வைப்பு
சங்கரன்கோவிலில் மா்மநபா்கள் தீ வைத்ததில் 2 ஆட்டோக்கள் எரிந்து கருகின.
சங்கரன்கோவிலில் மா்மநபா்கள் தீ வைத்ததில் 2 ஆட்டோக்கள் எரிந்து கருகின.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 6 ஆவது தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் நவமணி. அதே பகுதியைச் சோ்ந்தவா் விஜய். ஆட்டோ ஓட்டுநா்களான இவா்கள், வியாழக்கிழமை இரவு தங்களது ஆட்டோக்களை அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்தனராம்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மா்ம நபா்கள் வைத்த தீயால் ஆட்டோக்கள் பற்றி எரிந்தனவாம். அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்க முயன்றனா். அதற்குள் ஆட்டோக்கள் எரிந்து கருகின. இது குறித்து நவமணி அளித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement