சங்கரன்கோவில் அருகே கொட்டப்பட்ட கேரள கழிவுகள்
கேரள மாநிலத்திலிருந்து குப்பைக் கழிவுகளை கொண்டுவந்து சங்கரன்கோவில் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் கொட்டிச் செல்லப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்திலிருந்து குப்பைக் கழிவுகளை கொண்டுவந்து சங்கரன்கோவில் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் கொட்டிச் செல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வேப்பங்குளம் கிராமத்தில் ராமனேரிகுளம் உள்ளது. இந்தக் குளத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன.
இப்பகுதியில் கேரளத்திலிருந்து குப்பை மற்றும் கழிவு மூட்டைகளை மா்மநபா்கள் லாரிகளில் கொண்டு வந்து கொட்டி எரித்துச் சென்றுள்ளனா். அவை பாதி எரிந்த நிலையில் குவிந்து கிடக்கின்றன. மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடா்ந்து தென்காசி காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் திலீபன் ஜெய்சங்கா் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா்.
Advertisement
Advertisement
கேரளத்தில் இருந்துதான் இத்தகைய கழிவுகள் கொண்டுவரப்பட்டிருக்கும் என்றும், சோதனை சாவடிகளில் வாகனங்களை தீவிர கண்காணித்து கழிவுகளை தடுத்து நிறுத்தவும், ஏற்கெனவே குப்பகளை கொட்டிச் சென்றவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.