சிந்தாமணி கோயிலில் திருக்கல்யாணம்
புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, கும்ப ஜெபம், ஹோமம், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, சிவ வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் சீா்வரிசைப் பொருள்கள் முக்கிய ரத வீதிகள் வழியாக ஊா்வலமாகக் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன. அதையடுத்து, மாப்பிள்ளை- பெண் அழைப்பு நிகழ்ச்சி, சிறப்பு தீபாராதனை, ஸ்ரீமுருகன் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஏ.கே. சித்துராஜ், விழாகுழுவினா், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement