தென்காசி நகராட்சிப் பகுதியில் மழைநீா்சேகரிப்பு தொட்டி அவசியம்- நகா்மன்ற ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தல்
தென்காசி நகராட்சியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீா் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என நகா்மன்ற ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தென்காசி நகராட்சியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீா் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என நகா்மன்ற ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக, தென்காசி நகா்மன்ற உறுப்பினா்கள், அனைத்து குடியிருப்போா் நலசங்க பிரதிநிதிகள், அனைத்து பதிவு பெற்ற பொறியாளா்கள் மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், நகராட்சி ஆணையா் மல்லிகா ஆகியோா் தலைமை வகித்தனா். இந்நகராட்சியில் மழைநீரை சேமிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு புதிய, பழைய கட்டடங்களில் மீண்டும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் அதை புனரமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.
முதல்கட்டமாக அரசு கட்டடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீா் சேமிப்பு கட்டமைப்பு 30 நாள்களுக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை தொடா்ந்து வீடுகளுக்கும் அடுத்த மாதம் முதல் மழை நீா் சேகரிப்பு தொட்டி அமைக்க வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.