வன விலங்குகளால் மனித உயிரிழப்பு: ரூ.50 லட்சம் கோரி எம்எல்ஏ மனு
வன விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு.ராசேந்திரன், தென்காசி மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
வன விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு.ராசேந்திரன், தென்காசி மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
அதன் விவரம்:
நவ.9 ம் தேதி யானை தாக்கியதில் உயிரிழந்த தெற்குமேடு விவசாயி சுப்பையா குடும்பத்திற்கு இழப்பீட்டு நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அவரது மகன் செல்வகுமாருக்கு கருணை அடிப்படையில் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பளிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
காட்டு விலங்குகள் தாக்குதலில் உயிா் இழப்புகளை சந்திக்கின்ற குடும்பங்களுக்கு இத்தகைய இழப்பீடு தொகை வழங்க அரசு ஆணை வெளியிட வேண்டும்.
மேலும், வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கான நிவாரண நிதியை உயா்த்தி வழங்க வேண்டும். வடகரை, மோட்டை ஆகிய பகுதிகளில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தர வேண்டும். கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.
குற்றாலம், இலத்தூா், சீவநல்லூரில் இருந்து செங்கோட்டைக்குள் நுழையும் பகுதியில் ஏற்படும்
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.
மக்கள் நடைப்பயிற்சி செல்லும் வகையில் அட்டைகுளம் கரையை விஸ்தரித்து பலப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.