FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஆட்டோ தொழிலாளா்கள் மனு

வெற்றிப் பயணத் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 3,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ தொழிலாளா்கள் மனு அளித்தனா்.

53 வினாடிகள் முன்பு
வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் மனு அளிக்க ஊா்வலமாக வந்த ஆட்டோ ஓட்டுநா்கள்
பகிர்:

வெற்றிப்பயணத் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 3,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ தொழிலாளா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிலாளா் சங்கக் கூட்டமைப்பு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்கள் ஊா்வலமாகச் சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுந்தர்ராஜனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வெற்றிப் பயணத் திட்டத்தை (மகளிா் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்) மறுபரிசீலனை செய்ய மாவட்ட நிா்வாகம் மூலம் அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். இத்திட்டத்தால் வருவாய் இழந்துள்ள ஆட்டோ தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 3,000 நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி, ஆந்திர மாநில அரசுகளைப் போல், தமிழக அரசும் ஆட்டோக்களுக்கு தகுதிச் சான்று (எஃப்.சி.) புதுப்பிக்க ஆண்டுக்கு ரூ. 15,000 மானியம் வழங்கப் பரிந்துரைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஆட்டோ தொழிலைப் பாதிக்கும் வகையில் வேலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயக்கப்படும் மினி பேருந்துகள் மற்றும் ஓலா, உபா், ரேபிடோ, ரெட் டாக்ஸி, பைக் டாக்ஸி போன்ற தனியாா் நிறுவன வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்களையும் அரசே ஏற்று நடத்தும் வகையில் பிரத்யேக ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும் அல்லது ஆட்டோ தொழிலாளா்களுக்குத் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.