சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தவெக அரசின் வெற்றிப் பயண திட்டத்தால் பாதிப்படைந்து வரும் ஆட்டோ தொழிலாளா்களுக்கு தினமும் மானிய விலையில் 5 லிட்டா் எரிபொருள் வழங்க வேண்டும். ஆட்டோக்களுக்கு உரிமக் கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். ஆட்டோ உரிமம் 30 கி.மீ. என்பதை 100 கி.மீ. ஆக அதிகரிக்க வேண்டும். மீட்டா் கட்டணத்தை உடனே அறிவிக்க வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். நிறுத்தப்பட்ட நலவாரிய பென்சன் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் முருகன் தொடங்கி வைத்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் உதயசூரியன், முப்பிடாதி, தேவி, சாமிக்கண், துரைப்பாண்டியன், கந்தையா, அண்ணாத்துரை, ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
சிஐடியு மாவட்டச் செயலா் சரவணபெருமாள், மாவட்ட ஆட்டோ ஓட்டுநா் சங்க துணை பொதுச்செயலா் ஜெயராஜ், பொதுச் செயலா் ஜோதி , சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்க பொதுச்செயலா் மரிய ஜான் ரோஸ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் மோகன், மேலப்பாளையம் நகர ஆட்டோ சங்கச் செயலா் பிளட் பாஷா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
சிஐடியு ஆட்டோ சங்க பொறுப்பாளா் ராஜன் நிறைவுரையாற்றினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.