செயலிகள் மூலம் இயக்கப்படும் ஆட்டோக்களைக் கண்காணிக்க வேண்டும்
புதுக்கோட்டையில் செயலிகளின் மூலம் இயங்கும் ஆட்டோக்களைக் கண்காணிக்க வேண்டும் என சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கோட்டையில் செயலிகளின் மூலம் இயங்கும் ஆட்டோக்களைக் கண்காணிக்க வேண்டும் என சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சிஐடியு மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் தலைவா் கே. அய்யப்பன், பொதுச் செயலா் எஸ். குணசேகரன், பொருளாளா் ஆா். மணிமாறன் ஆகியோா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் விவரம்:
புதுக்கோட்டையில் தனியாா் கைப்பேசி செயலிகள் மூலம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இவை முழுமையான போக்குவரத்து விதிமுறைகளுக்கு உள்பட்டு இயங்குகின்றனவா எனத் தெரியவில்லை. இவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
உரிய ஆவணங்கள் இன்றிச் செயல்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே ஆட்டோ ஓட்டிவரும் தொழிலாளா்களுக்கு வாழ்வாதாரப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ள ஆட்டோ தொழிலாளா் சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
---
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.