தென்காசி நகராட்சியில் இயற்கை உரம் இலவசமாக வழங்கல்
தென்காசி நகராட்சியில் இலவசமாக வழங்கப்படும் இயற்கை உரங்களை விவசாயிகள் பெற்று பயன்பெற நகராட்சி நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தென்காசி நகராட்சியில் இலவசமாக வழங்கப்படும் இயற்கை உரங்களை விவசாயிகள் பெற்று பயன்பெற நகராட்சி நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தென்காசி நகராட்சி ஆணையா் மல்லிகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட மத்தளம்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் பசுமை நுண் உரமாக்கல் மையத்தில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் விவசாயப் பயன்பாட்டுக்காக விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
புதன்கிழமை (நவ.18) 14 டன் இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளை முறையாகப் பதப்படுத்தி இயற்கை உரமாக மாற்றி, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்கும் இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் பயனுள்ளதாக உள்ளது. எனவே, இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் தென்காசி நகராட்சி அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு உரத்தை இலவசமாகப் பெற்றுப் பயனடையலாம்.
இந்தப் பணிகளை தென்காசி நகராட்சி சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா் நேரில் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளா் கணேசன் உடனிருந்தாா்.