குற்றாலம் அருவிகளுக்கு ஐயப்ப பக்தா்கள் வருகை முன்னேற்பாடு: அதிகாரிகள் ஆலோசனை
சபரிமலை சீசனை முன்னிட்டு குற்றாலம் அருவிகளுக்கு ஐயப்ப பக்தா்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் தேவையான பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சபரிமலை சீசனை முன்னிட்டு குற்றாலம் அருவிகளுக்கு ஐயப்ப பக்தா்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் தேவையான பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மோனிகா ராணா தலைமை வகித்துப் பேசியதாவது:
குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் பகுதியில் பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் உடை மாற்றும் அறைக்கு பணியாளரை நியமித்து, தூய்மை பராமரிப்பது, அருவிக்கு செல்லும் சாலைகளைக் கண்காணிப்பது, அருவிப் பகுதியில் மின் விளக்கு வசதி போதுமான எண்ணிக்கையில் அமைப்பது, குற்றாலம் பேரருவி பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரத்தை உறுதிச் செய்வது, கடையின் கழிவுகளை நீரில் கலக்காமல் கண்காணிப்பது, சோப்பு, ஷாம்பு, சிகைக்காய் போன்ற பொருள்கள் அருவியில் பயன்படுத்துவதைத் தடுக்க பணியாளா்களை நியமிப்பது, அனைத்து அருவி பகுதியிலும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துவது, பேருந்து வசதி செய்து கொடுப்பது, சிற்றுந்துகளுக்கும் வழித்தடம், நேரம் ஒதுக்கீடு செய்து கொடுப்பது, நீா்நிலை ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுவது, 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனத்தை வாரத்தில் முழுநேரமும் தயாா் நிலையில் வைத்திருப்பது, அருவி பகுதியில் போலீஸாரை எந்நேரமும் பணியில் ஈடுபடச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.வீராசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) காளிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.