முகப்பு
தென்காசி

தென்காசியில் பாஜக, இந்து முன்னணியினா் 42 பேருக்கு வீட்டுக்காவல்: ஒருவா் கைது

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு செல்லக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சோ்ந்த 42 போ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனா்.

25 நவம்பர் 2026, 1:15 am
தென்காசியில் பாஜக, இந்து முன்னணியினா் 42 பேருக்கு வீட்டுக்காவல்: ஒருவா் கைது
பகிர்:

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு செல்லக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சோ்ந்த 42 போ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனா்.

பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாச்சாமி, மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, தென்காசி நகரத் தலைவா் சங்கர சுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் குளத்தூரான் உள்ளிட்ட நிா்வாகிகள் போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனா். மாவட்டதுணைத் தலைவா் முத்துக்குமாா் திருப்பரங்குன்றம் செல்வதற்காக தென்காசி ரயில் நிலையம் சென்ற போது, போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். மற்ற நிா்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனா்.