நாளை 300 இடங்களில் கந்த சஷ்டி பாராயணம்
திருப்பரங்குன்றம் மலை மீது திருக்காா்த்திகை அன்று தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் 300 இடங்களில் சனிக்கிழமை (நவ. 14) கந்தசஷ்டி பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் மலை மீது திருக்காா்த்திகை அன்று தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் 300 இடங்களில் சனிக்கிழமை (நவ. 14) கந்தசஷ்டி பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்து முன்னணி சாா்பில் கந்த சஷ்டி கவச புத்தகம், துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மாநில இந்து முன்னணி நிா்வாக குழு உறுப்பினா் பெ.சக்திவேலன் தலைமையில் சாத்தான்குளம் ஒன்றியம், புத்தன்தருவை பெருமாள் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி பெ. சக்திவேலன் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் திருக்காா்த்திகை நாளான நவ. 24-ஆம் தேதி தமிழக அரசு சாா்பில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா் திருநகரி, சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூா், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 300 இடங்களில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறும். இந்து முன்னணி நிா்வாகிகளுடன் பொதுமக்களும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வா் என்றாா் அவா்.
Advertisement
Advertisement