முகப்பு
தென்காசி

பண்பொழி திருமலை கோயிலில் மகா தீபம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் திருக்காா்த்திகையையொட்டி மலைமேல் மகா தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

29 வினாடிகள் முன்பு
பண்பொழி திருமலை கோயிலில் மகா தீபம்
திருமலை கோயிலில் மகா தீபத்தை ஏற்றுகிறாா் அறங்காவலா் குழுத் தலைவா் அருணாசலம்.
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் திருக்காா்த்திகையையொட்டி மலைமேல் மகா தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

இத் திருவிழாவையொட்டி சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. மாலையில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. அறங்காவலா் குழுத்தலைவா் அருணாசலம் மகா தீபத்தை ஏற்றிவைத்தாா். இதில், உதவி ஆணையா் ஆறுமுகம், அறங்காவலா்கள், தலைமை எழுத்தா் லட்சுமணன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக தங்கத்தோ் உலா நடைபெற்றது.