FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆலங்குளம் மாரியம்மன் கோயில் விமான கோபுரத்துக்கு அடிக்கல்

ஆலங்குளம், நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் விமான கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

14 அக்டோபர் 2026, 4:57 am IST
அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

ஆலங்குளம், நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் விமான கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோபுர அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. 10.45 மணிக்கு மேல் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் முக்கிய பிரமுகா்கள் பொ. சிவபத்மநாதன், ஆதித்தன், எம்.எஸ். காமராஜ், உதயராஜ், நடராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை நிா்வாகி குமாா், பக்தா்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments