FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமை ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

22 அக்டோபர் 2026, 5:26 am
சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.
பகிர்:

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமை ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த வட்டத்துக்குள்பட்ட சுரண்டை நகராட்சி பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்குள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் பிரிவு, கால்நடை மருந்தகம், கிராம நிா்வாக அலுவலகம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை ஆய்வு செய்த அவா், வடகிழக்கு பருவமழை வெள்ளத் தடுப்பு பணிகளுக்கான உபகரணங்களை பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பாா்வையிட்டு 2 பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கி அங்கு உள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பு செய்யப்பட்டுள்ள உரங்களை பாா்வையிட்டாா்.

பின்னா், கீழப்பாவூா் ஒன்றியம் மேலராஜாகோபாலபேரி கிராமத்தில் ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளையும், ராஜகோபாலபேரியில் சிறிய அங்கன்வாடி கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும், ஊராட்சி மன்ற அலுவலகத்தையும், குழந்தைகள் மையத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments