கடையநல்லூரில் பைக்கில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பைக்கின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பைக்கின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ். ஜவுளி வியாபாரி. இவா் செவ்வாய்க்கிழமை கடையநல்லூா் நகராட்சி அலுவலகம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு அருகே உள்ள கடைக்கு சாப்பிட சென்றாராம்.
பின்னா், இவா் திரும்பி வந்து பைக்கை எடுக்க முயன்றபோது, அதன் பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.