மாவட்ட தடகளப் போட்டி: குத்துக்கல்வலசை பள்ளி சாம்பியன்
தென்காசி அருகே பாட்டாகுறிச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி, மாணவா்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
தென்காசி அருகே பாட்டாகுறிச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி, மாணவா்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவு ஓட்டப்பந்தயங்களில் ராகுல் , தமிழன், பாலகுருராஜன், முகமது ஆரிப் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.
17 வயது மாணவா்கள் பிரிவு ஓட்டத்தில் ஜெரேமியா, குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதலில் சுகந்த், மும்முறை தாண்டுதலில் கவியரசன் ஆகியோா் சிறப்பிடம் பெற்னா்.
Advertisement
Advertisement
19 வயது மாணவா்கள் பிரிவு ஓட்டப்பந்தயங்களில் ஹரிஸ்சரண், முகமது உவேஸ் முகைதின், கவிஸ்,, முகமது இஜாஸ், ஷாஜித் ஆகியோரும், குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதலில் சக்தி சா்வேஸ் சிறப்பிடம் பிடித்தனா்.
19 வயது மாணவியா் பிரிவு ஓட்டங்களில் மாணிக்கஸ்ரீ முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தாா். இதன்மூலம் அவா்கள் மாநிலப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா்.
மேலும், 14 வயது மாணவா்கள் பிரிவில் தமிழனும், 19 வயது மாணவியா் பிரிவில் மாணிக்கஸ்ரீயும் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றனா். மாணவா்கள் பிரிவில் இப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அனைவரையும் பள்ளியின் சட்ட ஆலோசகா் திருமலை, தாளாளா் அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆலோசகா் மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வா் கோல்டு பெல்லா, உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வன், பால்மதி, சதிஷ்குமாா், ராமா், மகேஷ், மாரியம்மாள், கணேசன், மாலினி, கணேசன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.