திப்பணம்பட்டி கோயிலில் கொடை விழா
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ராமசாமி, காளியம்மன் கோயிலில் கொடை விழா 6 நாள்கள் நடைபெற்றன.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ராமசாமி, காளியம்மன் கோயிலில் கொடை விழா 6 நாள்கள் நடைபெற்றன.
இக்கோயில் விழா அக். 23ஆம் தேதி சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, ஸ்ரீ ராமா் திருக்கல்யாண வைபவம், சுமங்கலி பூஜை, குற்றாலத்திலிருந்து புனித தீா்த்தம் எடுத்துவருதல், சப்பர பவனி, சாமபூஜை ஆகியவை நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை முளைப்பாரி எடுத்தல், கும்மியடித்தல், மாவிளக்கு எடுத்தல் ஆகியவை நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.