FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

கேரளத்துக்கு கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு கனிம வளம் கடத்திய லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

29 அக்டோபர் 2026, 6:21 am
பகிர்:

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு கனிம வளம் கடத்திய லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடி வழியாக வந்த வாகனங்களை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்ட போது, அதில் எம் சாண்ட் மணல் இருப்பதும், வாகனத்தின் பதிவெண் போலியானது என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து புளியரை போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments