ஆவணங்களின்றி எம்-சாண்ட் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்
பொன்பாடி வாகன சோதனைச் சாவடி வழியாக உரிய ஆவணங்கள் இன்றி எம்-சாண்ட் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல்.
பொன்பாடி வாகன சோதனைச் சாவடி வழியாக உரிய ஆவணங்கள் இன்றி எம்-சாண்ட் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து ஆவணங்களின்றி எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களை டிப்பா் லாரி மூலம் திருத்தணி வழியாக சென்னைக்குக் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சனிக்கிழமை திருத்தணி போலீசாா் பொன்பாடி சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில், போதிய ஆவணங்களின்றி எம்-சாண்ட் கொண்டு வந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, டிப்பா் லாரியை போலீசாா் பறிமுதல் செய்தனா். இதற்கிடையே, லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடினாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.