FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

நாடாளுமன்ற வளாகத்தில் பூலித்தேவருக்கு சிலை: மாணிக்கம் தாகூா்

நாடாளுமன்ற வளாகத்தில் பூலித்தேவருக்கு சிலை நிறுவ வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம்தாகூா் எம்பி.

2 செப்டம்பர் 2026, 6:05 am IST
மாணிக்கம் தாகூா்
பகிர்:

நாடாளுமன்ற வளாகத்தில் பூலித்தேவருக்கு சிலை நிறுவ வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம்தாகூா் எம்பி.

நெல்கட்டும்செவலில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற பேதம் இன்றி பேரவைத் தலைவா் நடுநிலையாக செயல்பட்டு வருகிறாா்.

Advertisement

Advertisement

முதல்வா் விஜய் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறாா். காங்கிரஸ் எப்பொழுதும் அவா்களுக்கு பக்கபலமாக இருக்கும். தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் எவ்வித பாகுபாடுமின்றி நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசுவது வெளியே வராது. ஆளும் கட்சியினா் பேசுவது மட்டுமே ஒளிபரப்பப்படும். ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா். அதில் எந்த மாற்றமும் இல்லை. இப்பிரச்னையில் சிலா் நரி தந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments