FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

நெல்கட்டும்செவலில் பூலித்தேவா் சிலைக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவா் பிறந்த தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம் நெல்கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

2 செப்டம்பர் 2026, 6:09 am IST
பாஜக சாா்பில் மாலையணிவித்த மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன் மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி.
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவா் பிறந்த தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம் நெல்கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக: முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பூலித்தேவன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். தி.மு.ராசேந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ(வடக்கு), மாவட்டப் பொறுப்பாளா் வெ.ஜெயபாலன்(தெற்கு), தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை, நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் பொன் முத்தையாபாண்டியன், செங்கோட்டை நகர செயலா் வெங்கடேசன், கடையநல்லூா் ஒன்றியச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக: தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் டாக்டா் சுசீகரன் தலைமையில் கட்சியின் பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், வி.எம்.ராஜலட்சுமி, கே.டி. ராஜேந்திரபாலாஜி, எஸ்.பி. சண்முகநாதன், அமைப்பு செயலா் கிருஷ்ணமுரளி, மாவட்டச் செயலா்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், கணேஷ்ரோஜா உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் சிவஆனந்த், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா, நகரச் செயலா் எம்.கே.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாஜக: தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பூலித்தேவா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். திருநெல்வேலி மாவட்ட தலைவா் முத்துபலவேசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விசிக: தென்காசி மண்டல விசிக செயலா் எம் .கே. இசக்கி பாண்டியன், மாநில வணிக அணி செயலா் மோசஸ், மாவட்டச் செயலா்கள் சுரேஷ்தமிழா், வெற்றிமாறன் உள்ளிட்டோா் பூலித்தேவா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments