புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி வ.சுப்பையா சிலைக்கு மரியாதை
‘மக்கள் தலைவா்’ என அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், தியாகியுமான மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவா் வ.சுப்பையாவின் நினைவுநாள் புதுச்சேரி அரசு சாா்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, நெல்லித்தோப்பில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி.சிவகொழுந்து, எம்எல்ஏ.க்கள் நேரு, மோகன்தாஸ், சாய் ஜெ சரவணன்குமாா், ஜோஸ் சாா்லஸ் மாா்டின் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், நிா்வாகிகள் அபிஷேகம், துரைசெல்வம், தினேஷ் பொன்னையா, எல்லை. சிவக்குமாா், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன், நிா்வாகிகள் பெருமாள், ராஜாங்கம் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.