FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அரசு சாா்பில் பாரதியாா் சிலைக்கு மரியாதை

பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பில் அவரது திருவுருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா்கள் வி.பி.சிவகொழுந்து, பெ.ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள்.

12 செப்டம்பர் 2026, 6:52 am IST
பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பில் அவரது திருவுருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா்கள் வி.பி.சிவகொழுந்து, பெ.ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள்.
பகிர்:

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, அரசு கொறடா ஆறுமுகம், எம்எல்ஏ.க்கள்

சாய் ஜெ சரவணன் குமாா், வையாபுரி மணிகண்டன், விக்னேஷ் கண்ணன், அழகு (எ) அழகானந்தம், நாராயணசாமி, பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள பாரதியாா் நினைவு அருங்காட்சியகத்துக்கு சென்று அங்கு மகாகவி பாரதியாரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். விழாவில் பாரதியாரின் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.

பல்கலைக் கழகத்தில்...

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதியாா் மொழி மற்றும் இலக்கியப் புலத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவுநாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி அங்குள்ள வளாகத்தில் இருக்கும் மகாகவி பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலா்தூவியும் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு மரியாதை செலுத்தினாா் .

நிகழ்ச்சியில் பல்கலைக் கழகத்தின் கலை, கலாசார உறவுகளின் மேனாள் இயக்குநா் கிளமெண்ட் ச. லூா்து, தமிழியல் புலத் தலைவா் ரவிக்குமாா் மற்றும் பேராசிரியா்களும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments