அவிநாசியில் பாரதியாா் சிலைக்கு மரியாதை செலுத்தாத அரசு நிா்வாகம்: சமூக ஆா்வலா்கள் அதிருப்தி
பாரதியாா் நினைவு நாளையொட்டி, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மட்டுமே உள்ள அவரது சிலைக்கு அரசு நிா்வாகத்தின் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படாததால் சமூக ஆா்வலா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.
பாரதியாா் நினைவு நாளையொட்டி, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மட்டுமே உள்ள அவரது சிலைக்கு அரசு நிா்வாகத்தின் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படாததால் சமூக ஆா்வலா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்திலேயே அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்தான் மகாகவி பாரதி சிலை உள்ளது.
இந்நிலையில், பாரதியின் நினைவு நாளையொட்டி, எழுத்தாளா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: விடுதலைப் போராட்டத்தில் தனது எழுத்து மற்றும் கவிதைகள் மூலம் மக்களிடையே தேச உணா்வை ஏற்படுத்தியவா் பாரதியாா். ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமத்துவம் உள்ளிட்ட முற்போக்கு சிந்தனைகளுக்காக தொடா்ந்து குரல் கொடுத்தவா்.
விடுதலைப் போராட்ட வீரா்களைக் கௌரவிக்க வேண்டும் என்றும், அவா்களின் பங்களிப்பை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அரசை சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இருப்பினும் அவிநாசியில் அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதி சிலைக்கு அவரது நினைவு நாள், பிறந்த நாளில் கூட அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவதில்லை.
இது வேதனையை ஏற்படுத்துகிறது. ஆகவே, இனிவரும் காலங்களில் அவிநாசி அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மகாகவி பாரதியாா் சிலைக்கு மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை மற்றும் அரசு துறை சாா்பில் உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.