ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை
வ.உ.சிதம்பரனாரின் 155ஆவது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைந்துள்ள சிலைக்கு தமிழக அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வ.உ.சிதம்பரனாரின் 155ஆவது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைந்துள்ள சிலைக்கு தமிழக அமைச்சா்கள் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரசு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, வ.உ.சிதம்பரனாரின் வாரிசுதாரா் உ. செல்விக்கு, அமைச்சா்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனா். பின்னா், வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.
Advertisement
Advertisement
செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பெ.சா. கருப்பண ராஜவேல், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அய்யனாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஐகோா்ட் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.