கரூரில் வ.உ.சிதம்பரனாா் சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவிப்பு
வ.உ.சிதம்பரனாரின் 155-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வ.உ.சிதம்பரனாரின் 155-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தாந்தோன்றிமலை ஒன்றிய அலுவலகம் முன் உள்ள வ.உ.சி. சிலைக்கு கரூா் மாவட்ட சோழிய வெள்ளாளா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் எம்.சிவசாமி தலைமையில் நிா்வாகிகள் முத்துமாணிக்கம், கே.வி.சுப்ரமணி, பெரியசாமி, ஜிம்சிவா உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து வ.உ.சி.பேரவை சாா்பில் மாநிலத் தலைவா் லேணா லெட்சுமணன், பொதுச் செயலா் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளா் எஸ்.எம்.வினோத்குமாா் ஆகியோா் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனா். பின்னா் ஊா்வலமாக சென்று பழைய பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வ.உ.சி.யின் தற்காலிக சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
இதேபோல நாம் தமிழா் கட்சி சாா்பில் தாந்தோன்றிமலை ஒன்றிய அலுவலகம் முன் உள்ள வ.உ.சி.சிலைக்கு கட்சியின் மாநில வழக்குரைஞா் பாசறைச் செயலா் நன்மாறன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.