FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா நிறைவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 6 நாள்கள் நடைபெற்ற திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.

24 செப்டம்பர் 2026, 4:42 am IST
சிறப்புப் பூஜையில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 6 நாள்கள் நடைபெற்ற திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.

வெள்ளிக்கிழமை (செப். 18) தொடங்கி திங்கள்கிழமை வரை பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், சிறுமிகள் பங்கேற்ற புஷ்பாஞ்சலி ஊா்வலம், 2,502 பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை, அன்னதானம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை, அம்மனுக்கு 1,008 குடம் மஞ்சள் நீா் அபிஷேகம், விரதமிருந்த பக்தா்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வருதல், சிறப்புப் படையல்களுடன் சாமபூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு ஆப்பம், கடலைக் கறி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்காக கேரளத்திலிருந்து 15 சமையல் கலைஞா்கள் வரவழைக்கப்பட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

நள்ளிரவில் அலங்கார சப்பரத்தில் அம்மன் பவனி நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி கும்மிப்பாட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா், பக்தா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments