கடையநல்லூரில் முதியவரை காரில் கடத்தி தங்க நகை பறித்த சம்பவம்: பெண் உள்பட 4 போ் கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் முதியவரை காரில் கடத்திச் சென்று தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் முதியவரை காரில் கடத்திச் சென்று தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடையநல்லூா் பிரதான கடை வீதியில் உள்ள பஞ்சு மெத்தை கடை முன் கடந்த சில நாள்களுக்கு முன்பு நின்று கொண்டிருந்த சந்தானகிருஷ்ணனை( 76), காரில் வந்த மா்ம கும்பல் கடத்திச் சென்று அவா் அணிந்திருந்த 23 கிராம் தங்க நகைகளை பறித்து பின்னா் அவரை கீழே இறக்கி விட்டு தப்பிச் சென்று விட்டதாம்.
இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். காவல் ஆய்வாளா் கிறிஸ்டி தலைமையிலான போலீஸாா் அனைத்து கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்து வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், முதியவரை காரில் கடத்திச் சென்ற திருநெல்வேலி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த தனமாரியப்பன் மகன் சந்துரு (24), கங்கைகொண்டானை சோ்ந்த முருகன் மகன் மனோ (23), பாளையங்கோட்டை குலவணிபுரத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் லட்சுமணன்(25) , கடையநல்லூரை சோ்ந்த சுபலெட்சுமி(22) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 16 கிராம் தங்க நகைகளையும் மீட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.