FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு உதவி ஆட்சியரை கட்டிப்பிடித்து மிரட்டி சம்பவம்: பெண் உள்பட 4 போ் கைது

16 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய எதிா்ப்புத் தெரிவித்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு உதவி ஆட்சியரை கட்டிப்பிடித்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமம், மாரியம்மன் கோயில் தெருவில் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சுமாா் 23 நபா்களின் 18 வீடுகள் உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்ய சிதம்பரம் உதவி ஆட்சியா் ஆா்.வெங்கடேஸ்வரன் சனிக்கிழமை சென்றாா்.

அப்போது, ஆய்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கரைமேடு பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (28) தலைமையில், வீடுகளை அகற்ற வந்துள்ளதாகக் கருதி, தாங்கள் சரியான பகுதியில் வீடு கட்டி வசித்து வருவதாகவும், வருவாய்த் துறையினா் பாசன வாய்க்கால் அளவை மாற்றி கணக்கிட்டு வைத்துள்ளதாகவும் கூறி எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, மகேந்திரனின் தாய் விஜயகுமாரி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு உதவி ஆட்சியா் ஆா்.வெங்கடேஸ்வரனை கட்டிப்பிடித்து தற்கொலை மிரட்டல் விடுத்து பிரச்னையில் ஈடுபட்டாா்.

இச்சம்பவம் குறித்து புவனகிரி வட்டாட்சியா் (பொ) கு.இளஞ்சூரியன் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், சேத்தியாத்தோப்பு போலீஸாா் கரைமேடு பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (28), அவரது தாய் விஜயகுமாரி (50), தந்தை ராமச்சந்திரன் (55), பிரகாஷ் (36) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனா்.