FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சீர்காழி அருகே வீடு தீப்பற்றி எரிந்து பெண் பலி!

சீர்காழி அருகே வீடு தீப்பற்றி எரிந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து...

11 வினாடிகள் முன்பு
சீர்காழி அருகே வீடு தீப்பற்றி எரிந்து பெண் பலி! - படம்: தினமணி
பகிர்:

சீர்காழி: சீர்காழி அருகே வீடு தீப்பற்றி எரிந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீராநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் நூர்ஜகான் (வயது 60). இவரது கணவர் அப்துல் ஜலில்.

Advertisement

Advertisement

இவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் நூர்ஜகான் மட்டும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவரது ஒரே மகள் திருமணமாகி உதகையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் வீட்டை உட்புறமாக பூட்டிவிட்டு உறங்க சென்றுள்ளார். திடீரென நள்ளிரவு 3 மணிக்கு அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது நூர்ஜகான் வீடு தீப்பற்றி எரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் கூரை வீடு முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது.

இந்த தீ விபத்தில், நூர்ஜகான் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸார் உடனடியாக விரைந்து சென்று, உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனை பிரேத கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

நூர்ஜகான், இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

A woman has died after her house caught fire near Sirkazhi, an incident that has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.