FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

லாரிகள் மோதல்: கிளீனர் சாவு

சேரன்மகாதேவியில் உள்ள தனியார் காகித ஆலை வாயிலில் திங்கள்கிழமை இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் கிளீனர் உயிரிழந்தார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சேரன்மகாதேவியில் உள்ள தனியார் காகித ஆலை வாயிலில் திங்கள்கிழமை இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் கிளீனர் உயிரிழந்தார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் நடுவூரைச் சேர்ந்த கருகுலராஜா மகன் பேச்சிமுத்து (22). இவர் சேரன்மகாதேவியில் உள்ள தனியார் காகித ஆலையில் இயக்கப்படும்  லாரியில் கிளீனராக இருந்தாராம்.   இந்நிலையில், திங்கள்கிழமை மூர்த்தி என்பவர் இயக்கிய லாரியில், பேச்சிமுத்து பணியில் இருந்தாராம். லாரி, காகித ஆலையை விட்டு வெளியே வரும்போது எதிரே வந்த மற்றொரு லாரி நேருக்கு நேர் மோதியதாம். இதில் லாரியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்த முக்கூடல் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஓட்டுநர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments