திசையன்விளை அருகே நடமாடியது காட்டு நாய்: முடிவுக்கு வந்தது சிறுத்தை பீதி
திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக எழுந்த பீதியை அடுத்து, வனத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், அது காட்டுநாய் என வியாழக்கிழமை தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக எழுந்த பீதியை அடுத்து, வனத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், அது காட்டுநாய் என வியாழக்கிழமை தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
திசையன்விளையை அடுத்த இட்டமொழி அருகே உள்ள வாகைனேரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் பரவியதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. இதையடுத்து, வனத் துறையினர் அங்கு சென்று பதிவான விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதற்கிடையே, புதன்கிழமையும் சிறுத்தை நடமாடியதாக கிராம மக்கள் தெரிவித்ததால், பீதி மேலும் அதிகரித்தது.
இதனால், வனத் துறையினர் வாகைனேரியில் முதலில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகக் கூறப்பட்ட மலையாண்டி என்பவரின் வீட்டு மாட்டுத் தொழுவம் பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அந்த கேமராவில் விலங்கு எதுவும் பதிவாகவில்லை.
Advertisement
Advertisement
இந்நிலையில், 3ஆவது நாளான வியாழக்கிழமை திருநெல்வேலி வன அலுவலர் ராஜீவ், வனச் சரகர் தார்த்தீஸ், தூத்துக்குடி வன அலுவலர் நெல்லைநாயகம், வனச்சரகர் லோகநாதன், கால்நடை மருத்துவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிறுத்தையை பிடிக்கும் கூண்டுகளுடன் வாகைனேரி பகுதியில் முகாமிட்டனர்.
ஒரு கூண்டை, மலையாண்டி வீட்டு மாட்டுத் தொழுவம் அருகேயும், மற்றொரு கூண்டை தடுப்பணை அருகேயும் வைத்தனர். பின்னர், தடுப்பணை அருகே பதிவாகியிருந்த கால்தடங்களை ஆய்வு செய்தபோது, அது காட்டுநாயின் கால்தடம் என உறுதிசெய்தனர். இதையடுத்து, கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.