நெல்லை கம்பன் கழகத்தின் 446 ஆவது தொடர் சொற்பொழிவு
நெல்லை கம்பன் கழகத்தின் 446ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
நெல்லை கம்பன் கழகத்தின் 446ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவர் எம்.ஐயப்பன் தலைமை வகித்தார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார். துணைத் தலைவர் நசு.சங்கரன் வரவேற்றார். ராமனின் மிதிலைப் பயணம் என்ற தலைப்பில் முன்னாள் வங்கி அலுவலர் எம்.எஸ்.சக்திவேலும், யுத்த காண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் செளந்தரராஜன், பேச்சிமுத்து, சேதுமாதவன், கருடப்பன், மாரிமுத்து, பாண்டியன், வெங்கடாசலபதி, ஆண்டியப்பன், ஜெயா, ராமலட்சுமி, செல்வி, முத்துலட்சுமி, வள்ளி, லட்சுமி உள்பட 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கழகச் செயலர் கவிஞர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.