இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்
கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என கடவுளிடம் முறையிடும் வகையில் இந்து முன்னணியினர் திருநெல்வேலி நெல்லையப்பர்
கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என கடவுளிடம் முறையிடும் வகையில் இந்து முன்னணியினர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உண்டியலில் மனுக்களை செலுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில்களின் நிலங்கள், சிலைகள், சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, இம்மாதம் 12 ஆம் தேதி முதல் சனிக்கிழமை (ஆக.18) வரை கோயில் பாதுகாப்பு விழிப்புணர்வு யாத்திரை செல்வோம் என்ற தலைப்பில் இந்து முன்னணியினர் பிரசாரம் மேற்கொண்டனர். இதையடுத்து, திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் கோயில் உண்டியலில் பக்தர்களின் கோரிக்கை மனுக்கள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில், பொதுச்செயலர் பிரம்மநாயகம், மாவட்டச் செயலர்கள் சுடலை, சிவா, நகர பொதுச்செயலர் இராஜசெல்வம் மற்றும் நிர்வாகிகள் நெல்லையப்பர் கோயிலுக்கு வந்து, தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில் 47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள், 7 ஆயிரம் சிலைகளைக் காணவில்லை; பல ஆயிரம் கோடி முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பக்தர்களுக்கு வழங்கினர். இதற்கு கோயில் பணியாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது, கோயில் பணியாளர்களுக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ""நம்மை காக்கும் தெய்வத்திடம் பிரார்த்தனை'' எனும் தலைப்பில் அச்சிட்ட மனுவில் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களிடம் கையெழுத்துப் பெற்று கோயில் உண்டியலில் அவர்கள் செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.