FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்: சஞ்சய் தத்

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
தச்சநல்லூர் மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கஜா புயல் பாதித்த இடங்களை பிரதமர் மோடி பார்வையிடவில்லை. புயல் பாதிப்புக்கு தேவையான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. மாநில அரசும் சரியான நடிவடிக்கை எடுக்கவில்லை.
மூன்று மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியால் ராகுல் காந்தி மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்ததை வரவேற்கிறேன். ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகிய இரண்டு இளம் தலைவர்கள் இணைந்துள்ளது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேச்சுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.
அதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மண்டலம் வாரியாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் எச்.வசந்தகுமார், மாவட்ட பொதுச் செயலர் சொக்கலிங்ககுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments