FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொதிகைநகர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை தொடக்கம்

பாளையங்கோட்டை, பொதிகைநகரில் உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலில் 21ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

பாளையங்கோட்டை, பொதிகைநகரில் உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலில் 21ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 21) தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு பொதிகை விநாயகருக்கு கணபதிஹோமம், சுகிர்தஹோமம் நடைபெறுகிறது. சனிக்கிழமை (டிச. 22) காலை 7 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், இரவு 7 மணிக்கு சனீஸ்வர பூஜை, 108 நீராஞ்சனம், 9 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. 23ஆம் தேதி காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை, மாலை 4.30 மணிக்கு 2ஆம் கால லட்சார்ச்சனை, 24 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சர்வ ஐஸ்வர்ய பூஜை, இரவு 9 மணிக்கு தீபாராதனை, 25ஆம் தேதி காலை 8 மணிக்கு அஷ்டாபிஷேகம், மாலை 6.30 மணிக்கு சந்தியா தீபாராதனை, 26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், முற்பகல் 10.30 மணிக்கு விஷேச ஆயில்ய பூஜை, நூறும் பாலும் நாகர் ஊட்டு நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு படி பூஜை, விளக்கு பூஜை, இரவு 8.30 மணிக்கு கும்பேஷ கர்கசரி பூஜை, பிரம்ம கலச பூஜை, சையா பூஜை, கலஸாதி வாசம், அதிபாக ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
27ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு 108 கலச பூஜை, கஜ பூஜை, காலை 7 மணிக்கு பால்குடம், நெய்குடம் எடுத்தல், 9 மணிக்கு 108 கலசாபிஷேகம், 508 இளநீர் உள்பட 18 வகை அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு ஐயப்பன் வீதியுலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments