அருங்காட்சியகத்தில் ஜன. 4இல் சிறப்புப் பயிலரங்கு
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாநில அளவிலான சிறப்புப் பயிலரங்கம் இம் மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாநில அளவிலான சிறப்புப் பயிலரங்கம் இம் மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அரசு அருங்காட்சியகம், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையம் ஆகியவற்றின் சார்பில் "தமிழர் நாகரிகமும் தாமிபரணி பண்பாடும்' என்ற தலைப்பில் இப்பயிலரங்கு நடைபெறும். மானுடவியலாளர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவிக்க உள்ளனர். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.