சங்கர்நகரில் விழிப்புணர்வுப் பேரணி
சங்கர்நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
சங்கர்நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், சங்கர் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் நடைபெற்ற இப் பேரணிக்கு ஆலையின் துணைத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் மற்றும் ஆலை உதவி பொது மேலாளர் (மனிதவளம்) இரா.ஏகாம்பரம், ஆலை மருத்துவ அலுவலர் சேகர், உதவி தலைமையாசிரியர் ஆ.ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பா.உதயகுமார் பேரணியைத் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பேருந்து நிறுத்தம், தாழையூத்து பஜார் வழியாக பள்ளியை அடைந்தது. பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.