புளியரை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம், புளியரை "எஸ்' வளைவுப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடந்தவரை போலீஸார் புதன்கிழமை இரவு மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், புளியரை "எஸ்' வளைவுப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடந்தவரை போலீஸார் புதன்கிழமை இரவு மீட்டனர்.
தமிழக - கேரள எல்லைப் பகுதியான "எஸ்' வளைவுப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் தலை, கைகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக புளியரை போலீஸுக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் போலீஸார் சென்று, அந்த நபரை மீட்டு, செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர், தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து புளியரை போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் சுரண்டையைச் சேர்ந்த முருகையா மகன் ராஜா என்ற அருணாசலம் என்பதும், அவர் மீது சுரண்டை, ஆலங்குளம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதாகவும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.