பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு
பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் பருவ அறுவடை முடிந்த நிலையில், பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளனர். இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகு பாசனத்துக்கு 35 கனஅடி, பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் 54 கனஅடி, தெற்கு கோடைமேலழகியான் கால்வாயில் 26 கனஅடி, நதியுன்னி கால்வாயில் 70 கனஅடி, கன்னடியன் கால்வாய் பாசனத்தில் 400 கனஅடி,
கோடகன் கால்வாயில் 86 கனஅடி, பாளையம் கால்வாயில் 90 கனஅடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால்வாயில் 170 கனஅடி, மருதூர் கீழக்கால்வாயில் 156 கனஅடி, ஸ்ரீவைகுண்டம் வடக்கு பிரதானக் கால்வாயில் 303 கனஅடி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் மா. செந்திவேல்முருகன் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்த வரையில் கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 16,837 ஹெக்டேரில் 15,500 ஹெக்டேர் பரப்பில் நெல் அறுவடை முடிவடைந்துள்ளது. அறுவடை பெருமளவில் முடிவடைந்த நிலையில் விவசாயிகள் பிசான பருவ சாகுபடி பணியை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 3,500 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் நடவு செய்யும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசான பருவத்தில் 45 முதல் 50 ஆயிரம் ஹெக்டேர் வரை நெல் நடவு செய்ய வாய்ப்புள்ளது. பாசனத்துக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
நீர்வரத்து: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 405.39 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 100 கனஅடி, கடனாநதி அணைக்கு 47 கனஅடி, ராமநதி அணைக்கு 15 கனஅடி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினாறு, கொடுமுடியாறு அணைகளுக்கு தலா 5 கனஅடி நீர்வரத்து இருந்தது.
கடனாநதி அணையில் இருந்து 70 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 30 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 25 கனஅடி, அடவிநயினாறு அணையில் இருந்து 40 கனஅடி, கொடுமுடியாறு, குண்டாறு அணைகளில் இருந்து தலா 5 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்மட்டம்: பாபநாசம் அணை-119.60 அடி, சேர்வலாறு அணை-128.87 அடி, மணிமுத்தாறு அணை-98.30 அடி, கடனாநதி அணை-73.80 அடி, ராமநதி அணை-68 அடி, கருப்பாநதி அணை-64.34 அடி, குண்டாறு அணை-35.63 அடி, அடவிநயினாறு அணை-99.50 அடி, வடக்குப்பச்சையாறு அணை-29.75 அடி, நம்பியாறு அணை-22.63 அடி, கொடுமுடியாறு அணை-41 அடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.