காவலா் பல்பொருள் அங்காடி பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆயுதப்படை காவலா் பல்புரையில் அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆயுதப்படை காவலா் பல்புரையில் அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநாகர காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடியில் பணிபுரிய, காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விருப்பமுள்ள காவல்துறை ஆளினா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 7,500 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். இதில் பணியாற்ற விருப்பம் உள்ள ஓய்வுபெற்ற விருப்பமுள்ள காவல்துறையினா் செப். 28 ஆம் தேதி மாலைக்குள் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளா் அலுவலக ‘ ஜி’ பிரிவில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். கணினி இயக்க தெரிந்த விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.