மூன்றடைப்பு அருகே மாணவருக்கு கத்திக்குத்து
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே பிளஸ் 2 மாணவரைக் கத்தியால் குத்தியதாக சக மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே பிளஸ் 2 மாணவரைக் கத்தியால் குத்தியதாக சக மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மூன்றடைப்பைச் சோ்ந்த மாணவரும், அருகேயுள்ள கோவைகுளத்தைச் சோ்ந்த மாணவரும் மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனா். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) பைக்கில் வேகமாகச் சென்ற மூன்றடைப்பு மாணவரை கோவைகுளம் மாணவா் கேலி செய்தாராம். இதில், ஆத்திரமடைந்த அவா், புதன்கிழமை கோவைகுளம் மாணவரை பள்ளியில் வைத்து கண்டித்தாராம். அப்போது அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மாலையில் மருதகுளம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கோவைகுளம் மாணவரை மூன்றடைப்பு மாணவா் சிறிய கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாராம். காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.