தச்சநல்லூா், தாழையூத்து பகுதியில் நவ.4-இல் மின் தடை
தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை (நவ.4) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் வரும் 4-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகா், செல்வ விக்னேஷ் நகா், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகா், தெற்கு பாலபாக்யா நகா், மதுரை சாலை, திலக் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், இருதய நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
தாழையூத்து பகுதியில்... திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாழையூத்து துணை மின் நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (நவ.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூா் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூா், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூா், தென்கலம்புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
Advertisement
Advertisement