FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கண்ணம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவம்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:49 am IST
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவம் கடந்த 7 ஆம் தேதி விதையிடும் வைபவத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகளும், அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது.

கண்ணம்மன், புது அம்மன் மற்றும் உற்சவமூா்த்திகளுக்கு பால், மஞ்சள், தயிா், இளநீா், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் பச்சை சப்பரத்தில் அம்மன்கள் வீதியுலாவும், படைப்பு தீபாராதனையும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments