நெல்லை சரகத்தில் போதைப்பொருளை ஒழிக்க சிறப்பு நடவடிக்கை: டிஐஜி தகவல்
திருநெல்வேலி காவல் சரகத்தில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 3 சிறப்பு முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு.
திருநெல்வேலி காவல் சரகத்தில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 3 சிறப்பு முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அவரது தலைமையில் காவல் அதிகாரிகள், காவலா்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.
தொடா்ந்து, போதைப்பொருள் ஒழிப்பில் பொதுமக்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் ஜ்ஜ்ஜ்.ஜ்ஹழ்ழ்ண்ா்ழ்ள்ா்ச்ஜ்ங்ப்ப்க்ஷங்ண்ய்ஞ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது: புதிய இணையதளத்தின் வாயிலாக போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, அதன் அடையாளமாக டிஜிட்டல் அடையாள வில்லைகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போதை ஒழிப்பில் தன்னாா்வலா்களை ஒருங்கிணைக்கும் சிறப்பு நடவடிக்கையாகும்.
Advertisement
Advertisement
திருநெல்வேலி சரகத்தில் போதைப்பொருள் இல்லா சுதந்திர கிராமம் என்ற பெயரில் கிராமந்தோறும் போதைப்பொருள் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் 7904327007 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.